A.K.M. Ramzy / 2020 நவம்பர் 22 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் திடீரென உயிரிழந்தார்.
அதனால் அவரது சடலத்தில் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. எனினும் அவருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago