Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எஸ். நிதர்ஷன், எம். றொசாந்த்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி, கலைவாணி வீதி பகுதியில், இன்று (25) ஏற்பட்ட கைகலப்பில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை, அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் அந்த தர்க்கம் கைகலப்பாக மாறியது.
இதன்போது குறித்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில், படுகாயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் ஓட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் போது, வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்தார். மகள், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago