Freelancer / 2023 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வட்டுக்கோட்டை - முதலியகோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள், திடீர் மரண விசாரணை அதிகாரி அவர்கள் சடலத்தை எரிக்குமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபோது,
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை வைத்தே நான் அவர்களுக்கு எரிக்குமாறு ஆலோசனை வழங்கினேன். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி அது ஒரு தற்கொலை என கூறினார்.
மேலும், சிறுமியின் தாயார் தனது பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என கூறினார். இதையடுத்து சடலத்தை எரிப்பதா அல்லது புதைப்பதா என கேட்டார். மரணத்தில் சந்தேகமும் இல்லை என கூறுகின்றீர்கள், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி தற்கொலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உங்களது சமய முறைப்படி எரிக்கலாம் அல்லது புதைக்கலாம். அது உங்களது விருப்பம் என கூறினேன். என்றார். R
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago