2025 மே 15, வியாழக்கிழமை

டிப்ளோமா தர கற்கைக்கு விண்ணப்பங்கள் கோரல்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், 2020ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த. சாதாரண தரம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தக் கற்கை நெறிகள், 3 மாதகளைக் கொண்டதாகும்.

இதற்கமைய, அடிப்படை ஆங்கிலக் கற்கை நெறி, பல்திறன் கைப்பணியாளர், இலத்திரனியல் வெல்டிங், பொறியீட்டுச் சான்றிதழ் போன்ற சான்றிதழ் தரக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கற்கை நெறிகளைப் பயில விரும்புவோர், ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர், பணிப்பாளர், தொழில்நுட்பவியல் கல்லூரி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு, விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .