2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’தடுப்பூசியைப் பெற்ற எவருக்கும் பாதிப்பு இல்லை’

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாவட்டத்தில் தடுப்பூசியைப் பெற்ற எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரிவித்த வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியைப் பெற்று கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில், தற்போதைய தடுப்பூசி வழங்கல் நிலைமை  தொடர்பில் கருத்துரைக்கும் பேதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முதல் நாளில் 2 ஆயிரத்து 948 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள் என்றும் இரண்டாவது நாளில் 6000 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள என்றும் கூறினார்.

நேற்று (01), 13 ஆயிரத்து 914 ஆயிரம் பேர் தடுப்பூசியைப்  பெற்றிருக்கின்றார்களெனத் தெரிவித்த அவர், இன்று (02)  15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியைபெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

'முதல் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்திருக்கின்றன. அநேகமாக இன்று மாலை அல்லது நாளையுடன் அந்த ஐம்பதாயிரம் தடுப்பூசிகளினை முற்றாக பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

'எனவே இதுவரை தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்த பாதிப்போ, பாதகமான  விளைவுகளோ எதுவும் பதிவாகவில்லை. எனவே பொதுமக்கள் தயங்காது, அச்சப்படாது தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X