2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தம்பகாமத்தில் வாள் வெட்டு: ஒருவர் பலி

S. Shivany   / 2020 நவம்பர் 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, தம்பகாமம்- மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது, இனம் தெரியாத நபர்கள்  வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

வாள் வெட்டுக்கு இலக்கான  நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாரென, பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில், பழங்கள் வேண்டி விட்டு, மாமுனை நோக்கி பயணித்தபோதே குறித்த நபர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மாமுனை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (40) என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X