2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தமிழக மக்களுக்கு உதவுதற்காக நிதியம் உருவாக்க தீர்மானம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் வடமாகாண சபையினால் நிதியம் ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை(06) தெரிவித்தார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக, வடமாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் வடமாகாண சபை பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  தெரிவிக்கையில்,

'வெள்ளப் பாதிப்பினால் உயிர்களை இழந்து, சொத்துக்களை இழந்துள்ள தமிழக மக்களுக்கு வடமாகாண சபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முகமாக, நிதியம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களின் பங்களிப்பினைப் பெற்று எதிர்வரும் 21ஆம் திகதி, யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கையளிக்க உள்ளோம்.

நிதியத்துக்;கான வங்கிக் கணக்கினை நாளைய தினம் (இன்று திங்கட்கிழமை) ஆரம்பிக்க உள்ளோம். அந்தக் கணக்கு இலக்கத்துக்;கு நேரடியாகவோ பேரவை ஊடாகவோ பங்களிப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி வரை வழங்கலாம்.

கணக்கு இலக்கத்தினை ஊடகங்கள் வாயிலாக அறிவிப்போம், புலம்பெயர் உறவுகளும் தங்களாலான உதவிகளை வழங்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .