2026 மார்ச் 21, சனிக்கிழமை

தலைமறைவான அறுவர்: நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய நபர்களுடன், பஸ்ஸில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்த, யாழ். பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

வெள்ளவத்தையில் இருந்து யாழுக்கு வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, இவர்களுடன் பஸ்ஸில் பயணித்த 37 பணிகள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் அந்த பேருந்தில் பயணித்த 6 பேரின் அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டு, அவரக்ள்  நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். கடந்த 5 நாளகளாக ஆறு பேரையும் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போதிலும் , அவர்களை கண்டறிய முடியாத நிலையில் , தற்போது அவர்களின் அலைபேசி இலக்கத்தினூடாக அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள, தொலை த்தொடர்பு நிறுவனங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக, பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .