Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
மொரட்டுவா பகுதியில் இருந்து சாவகச்சேரி பகுதிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர், சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மொரட்டுவா பகுதியில் இருந்து மூன்று வாகனங்களில் தளபாடங்களுடன் வந்த 10 பேர், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று, கிராமங்களுக்குள் கால்நடையாக சென்று தளபாட விற்பனைகளை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த வீட்டுக்குச் சென்ற சுகாதாரப் பிரிவினர், வீட்டில் இருந்த 10 பேரையும் அதே வீட்டில் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அதேவேளை, தற்போதைய கொரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு, வீடுகளுக்கு பொருட்கள் விற்க வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அது தொடர்பில் மக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago