2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

’தவறான தகவல்களை வழங்கி ஆதரவு சேகரிக்கும் கட்சிகள்’

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கு – கிழக்கில் வேலைவாய்ப்பு வழங்குவதாக, தமிழ் இளையோர்களுக்கு தவறான தகவல்களை வழங்குகின்ற அரசாங்கத்தின் ஆதாரவுக் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், இளையோரிடம் விண்ணப்பப்படிவங்களை வழங்கி விவரங்களைச் சேகரிக்கின்றனரென்று, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழில், நேற்றைய தினம் (26) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சிலர், தவறான தகவல்களை வழங்கி, இளையோரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்களெனவும் அது தொடர்பில் தமது வேட்பாளர்கள் தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றனரெனவும் கூறினார்.

“வடக்கு – கிழக்கில் அரசு சார்புக் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் தமிழ் இளையோர்களைத் தமது பக்கம் ஈர்ப்பதற்காக, உங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தவறான தகவல்களை வழங்குகின்றனர். அத்தோடு, சிலர் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் விவரங்களைப் பெற்று வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

அது அப்படி நடக்க முடியாதெனத் தெரிவித்த அவர், திடீரென்று ஒரு வேலைவாய்ப்பை வழங்க முடியாதெனவும் இது தொடர்பில் நாடாளுமன்றுக்கு அறிவித்ததன் பின்னரே, வேலைவாய்ப்புகளைப் பெற முடியுஅமனவும் கூறினார்.

தேர்தல் காலத்தை ஒட்டியோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காகவோ வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாதெனத் தெரிவித்த அவர், இது தொடர்பில் தமது வேட்பாளர்களாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் தமிழ் இளையோர்களிடம் எடுத்துரைத்து வருகின்றோமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .