Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அல்லது கூட்டாட்சி தத்துவ தீர்வே தேவையாகவே உள்ளதெனத் தெரிவித்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அதனை விடுத்து 13ஐ மட்டும் தீர்வாக ஏற்கமுடியாதெனவும் கூறினார்.
அத்துடன், தமக்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக வெளிப்படையாக கூறுவதில், ஐக்கிய தேசியக் கட்சி நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தேர்தலின் போது, தமிழ் மக்களுக்கு எதை செய்யப் போகின்றோம்; எவ்வாறான தீர்வை இனப் பிரச்சினை தீர்வாக தரப் போகின்றோம் என்பதை, ஜனாதிபதி வேட்பாளர்கள் முதலில் தெளிவாக தமக்கு எடுத்துக் கூற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அந்தவகையில், தற்போது ஜே.வி.பியும் பொதுஜன பெரமுனவும் இவ்வாறான தீர்வை தருவதாக, வெளிப்படையாக கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நழுவலான போக்கில் பதில் சொல்வதாகவும் கூறினார்.
சமஷ்டி அல்லது கூட்டாட்சி தத்துவத் தீர்வு தமக்குத் தேவையாக உள்ளதாகத் தெரிவித்த சிவாஞானம், 13 ஆவது திருத்தில் உள்ள பல விடயங்கள் தமக்கு கிடைக்கவில்லையெனவும் மாகாண அதிகாரங்களை விட மத்தியின் அதிகாரங்களே அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமக்கான தீர்வை வெளிப்படையாகக் கூற வேண்டுமெனவும் இவ்வாறான தீர்வை தான் வழங்கவுள்ளோம் என்று எவர் ஒருவர் தென்னிலங்கையிலும் துணிந்து மக்கள் முன்னிலையில் துணிந்து கூறுகிறாரோ அவருக்கே தாங்கள் ஆதரிப்பது குறித்து சிந்திப்போமெனவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago