2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தூயநகர திட்டத்தைச் செயற்படுத்த இராணுவ அணி

சொர்ணகுமார் சொரூபன்   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாழ் மாநகர சபை, தூய நகர திட்டத்தை நோக்கி பயணிப்பதுக்கு இராணுவ ஆளணியினை தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உறுதியளித்ததாக” யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் இன்று (18) தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் யாழ். மாநகர மேயர் ஆனோல்ட்க்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய சந்திப்பானது நமது நகரை தூய்மை நகராக்குதல் தொடர்பாக அமைந்தது. யாழ் மாநகரை சுத்தமாக்கி தூயநகர் நோக்கி பயணிப்பதுக்கு கழிவகற்றல் என்பது எமக்கு மிகவும் சவாலாக உள்ளது. ஆளுநரும் இதில் கூடிய கவனத்தை எடுப்பதாக கூறியுள்ளார்.

குறிப்பாக கழிவகற்றல் பொறிமுறை ஒன்று உருவாக்குமாறும்  அதனை செயற்படுத்த தனது ஒத்துழைப்பை தருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் இராணுவத்தினரை உள்ளீர்க்கலாம் எனவும், இராணுவத்தினரும் மக்களுக்கான பணியினையே மேற்கொள்கின்றனர் எனவும் ஒற்றுமையாக நாம் இத்திட்டத்தை கொண்டு நடாத்தவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், யாழ் மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவு அகற்றல், வடிகால் சீரமைப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .