Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2022 மார்ச் 03 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 10ஆம் கட்டையில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்களை வெட்டி, கடத்திய இருவர், நேற்று (02) கைதுசெய்யப்பட்டனர்.
தேங்கங் காட்டுப் பகுதிக்குள், லொறியொன்று நுளைந்துள்ளமை தொடர்பில் மாங்குளம் வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
29 தேக்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு, லொறியில் ஏற்றப்பட்டு, அதற்கு மேல் இயற்கை உரம் இடப்பட்டு, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டுசெல்ல முற்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஒட்டுசுட்டானில் இருந்து இயற்கை உரம் ஏற்றிக்கொண்டு, யாழ்ப்பாணம் செல்லமுற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவயவந்துள்ளது.
தேக்க மரக் குற்றிகள் ஏற்றிய லொறி, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago