Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
இந்நாடு எதிர்நோக்கியுள்ள தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு, இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அவ்வாறில்லாவிடின், அபிவிருத்திகளால் எவ்விதப் பிரயோசனமும் இல்லையென்றார்.
மயிலிட்டித் துறைமுகப் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், மயிலிட்டித் துறைமுக வளாகத்தில், இன்று (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவை எம்.பி, மேற்கண்டவாறு கூறியதோடு, இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் விடயத்தில், ஜனாதிபதி உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, இன்னமும் தீர்வு காணப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும் நிலங்கள் விடுவிக்கப்படுமென்ற அறிவிப்பை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பதிலை, இன்றே (நேற்று) ஜனாதிபதி கூறவேண்டுமென வலியுறுத்திய மாவை எம்.பி, இனப் பிரச்சினைத் தீர்வே முக்கியமாக இருக்கவேண்டும் எனவும் அந்த நம்பிக்கையில் தான், மக்கள் இந்த நல்லாட்சிக்கு வாக்களித்தார்கள் என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago