2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

​தொடர்ந்தும் கையெழுத்து

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்றும் (23) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் - மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இந்தக் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X