2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திருமண வீட்டுக்குச் சென்றவர்கள் விபத்தில் பலி

George   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்லநாயகம் கபிலன்

மீசாலை புத்தூர் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (06) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
 
புத்தூரைச் சேர்ந்த யேசு அன்று (வயது 25), சின்னக்குட்டி உதயராசா (வயது 51) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
 
திருமணச்சடங்கு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், பஸ்ஸின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 
பஸ் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .