2025 மே 01, வியாழக்கிழமை

நகைக்கடையில் பணத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பல்

Freelancer   / 2025 ஜனவரி 17 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவு என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்து கடையில் இருந்தவர்களுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .