Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டுகுளப் பகுதியில், கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெரா, அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்டுள்ளது.
அப்பகுதியில் குப்பைக் கொட்டுபவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபை ஊடாக நடவடிக்கை எடுக்கும் நோக்குடன், அந்தப் பகுதியில் வதியும் அரச அலுவலகர் ஒருவரால், மாநகர சபை உறுப்பினர்கள் முன்னிலையில் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்பட்டது.
இதையடுத்து, சி.சி.டி.வி கமெராவைப் பொருத்தியவருக்கு, வெளிநாடு மற்றும் உள்நாட்டு அலைபேசி இலக்கங்களிலிருந்து தொடச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதனால், குறித்த அலுவலகர், அங்கு பொருத்தியிருந்த சி.சி.டி.வி கமெராவை அகற்றியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னெடுக்க வேண்டிய பணியை தன்னார்வத்தில் முன்னெடுத்த குறித்த வீட்டு உரிமையாளர், தற்போது அச்சுறுத்தல் காரணமாக அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago