Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறக்கச் செய்தல் என்கின்ற அரசாங்கத்தினதும் மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு, தமிழ் மக்களுக்காகப் போராடுபவர்களும் சேர்ந்து ஒத்துழைக்கின்றார்களா என்கின்ற சந்தேகம் எழுந்திருப்பதாக, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம், மன்னாரில் நேற்று (11) காலை திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இங்கு வேலை செய்கின்ற அமைப்புகள், அதிகம் திட்டம் செய்கின்றன எனவும், அவை போராடவில்லையெனவும் தெரிவித்த அவர், திட்டம் தயாரித்து வருகின்ற பணத்தைச் செலவு செய்வதற்கு வேலை செய்தனவே தவிர, அவர்கள் உண்மையாகப் போராடவில்லையெனவும் குறிப்பிட்டார்.
"விடுதலை சார்ந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்ந்து தேடுகின்ற ஒரு நிலைப்பாட்டுக்கு, உரிமை சார்ந்து, உறவு சார்ந்து, பணி சார்ந்து செய்யப்பட வேண்டிய இடத்திலே, அடிப்படை நேர்மை வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம், இதனைப் போராட்ட அமைப்பாக மாற்றி, எப்போதும் மக்களுக்காக உண்மையாக போராடக்கூடிய அடிப்படையை உருவாக்க வேண்டுமென, அவர் மேலும் கோரினார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
55 minute ago
3 hours ago