Niroshini / 2021 மே 16 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நாடாளாவிய ரீதியில், பயணத் தடை அமுலில் இருக்கும் வேளையில், யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில், ஐந்து வீடுகளிலும் கோவில் ஒன்றிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நாவற்குழி - 5ஆம் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள்ளும் அடுத்தடுத்து புகுந்த திருடர்கள், ஒரு வீட்டில் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும், மற்றொரு வீட்டில் 40க்கும் மேற்பட்ட வளர்ப்பு புறாக்களையும் மற்றைய வீட்டில் 16 வளர்ப்பு கோழிகளையும் மற்றைய வீட்டில் 6 வளர்ப்பு கோழிகளையும் ஐந்தாவது வீட்டில் 5 வளர்ப்பு முயல்களையும் திருடியுள்ளனர்.
அத்துடன், நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவிலின்; ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள், கோவிலில்; இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது; தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026