Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
காரைநகர் பகுதியில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை ஒன்று, நீதிமன்ற உத்தரவின் பேரில், காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் உள்ள பலசரக்கு கடையொன்றை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனைக்குட்படுத்திய போது, பழுதடைந்த நெத்தலிக் கருவாடுகள், மிளகு தூள் பொதிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. அத்துடன், கடை மிகுந்த சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டுள்ளது.
அதேவேளை 80 சதவீத எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 08 சுருட்டுக்கட்டுகளும் மீட்கப்பட்டன.
அவை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, நீதவான், எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக சுருட்டை வைத்திருந்த குற்றத்துக்காக கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், சுகாதார சீர்கேட்டுடன் கடை இயங்கியமையால் காலவரையின்றி கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன், வழக்கு விசாரணை ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago