2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பஸ் சாரதியை வெட்டியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியை, கோப்பாய் பகுதியில் வைத்து வாளால் வெட்டி காயம் ஏற்படுத்திய சந்தேகநபரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.  

கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கோப்பாய் புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சந்தேகநபர், சங்கானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் மேலும் நால்வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் பணம் கொடுத்து கைக்கூலிகளை ஏவி, இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X