Janu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாகப் புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன், நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச் சீட்டுக்களை பெற யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பு ஒன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத்


9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago