2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாழடைந்த கிணற்றில் பாயில் மிதந்த சடலம்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில், தனியார் காணி ஒன்றிலுள்ள கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் இனம்தெரியாத நிலையில் சடலம் ஒன்று, இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து பிரதேச மக்கள்
ஆராய்ந்த போதே, கிணற்றில் சடலம் காணப்பட்டுள்ளது.

பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட காணியில் உள்ள கிணற்றிலேயே சடலம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த காணி சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாயினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதால் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக, கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர் கிளிநொச்சி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X