Editorial / 2023 நவம்பர் 17 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த், நிதர்சன் வினோத்,
பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே புதன்கிழமை (15)உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.
சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து , இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து , சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago