2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம்

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் புதிய பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பல பிரதமர் அலுவலகத்துக்கு கிடைக்கப் பெற்றதையடுத்து, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் நாள்களில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் பிரதமரின் கட்டுப்பாட்டில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .