2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பிரதேசசபை உறுப்பினரின் வீட்டில் அட்டகாசம்

Freelancer   / 2022 மார்ச் 04 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் வெருடைய தந்தையை தாக்க முற்பட்டதுடன், வீட்டின் வேலிகளை சேதப்படுத்திச் சென்றுள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை  மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர், பாராளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி, அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .