Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய மாநாடு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று (03) காலை, கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து போராளிகள் மற்றும் பொது மக்களுக்கான அஞ்சலியுடன் மங்கள விளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் இம்மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச சந்திரன், அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், கட்சியின் பொருளாரும் மன்னார் நகர சபையின் உறுப்பினருமான சம்பூரணம் இரட்ணசிங்கம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்
நிகழ்வின் ஆரம்பத்தில் கடந்த 40 வருடமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி கடந்து வந்த பாதை தொடர்பான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் அறிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago