Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஆண் சிசு, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.
துன்னாலை மேற்கு கரைவெட்டி பகுதியைச் சேர்ந்த சிவனேசன் புவனேஸ்வரி தம்பதிகளின் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
\கடந்த 13ஆம் திகதி குறித்த குழந்தை பிறந்துள்ளதுடன், நேற்று முன்தினம் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
51 minute ago
59 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
2 hours ago
6 hours ago