Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 4 நாள்களேயான சிசுவொன்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
துன்னாலை மேற்கு - கரைவெட்டி பகுதியைச் சேர்ந்த சிவனேசன், புவனேஸ்வரி தம்பதிக்கு, 13ஆம் திகதியன்று, குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை (16), குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையென, மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
8 hours ago