Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 03 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவி;த்தார்.
இல்லாவிடின், சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டதைப் போன்று, பாரியதொரு தொற்றுப் பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது எனவம், அவர் எச்சரித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் இந்துப் பெருமக்கள் தற்போது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் எனவும் தற்போது நாட்டில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் தினமும் நாட்டில் 500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்கானப்படுவதுடன், இறப்புக்களும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் தமது நாட்டில் பாரியதொரு கோவிட்-19 தொற்றுப் பரம்பல் ஏற்பட்டதை நினைவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி இப்பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் எனவும் இல்லாவிடின், சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டதைப் போன்று பாரியதொரு தொற்றுப் பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது எனவம் எச்சரித்தார்.
'எனவே, இந்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காக வர்த்தக நிலையங்களில் ஒன்று கூடும்போதும், கோவில்களில் வழிபாடுகளுக்காக ஒன்றுகூடும் போதும் கோவிட் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
'பொதுமக்கள் அனைவரையும் இப்பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம்' எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago