Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 01 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மீசாலை - புத்துார் சந்தியில், நேற்று (30) காலை 11.30 மணியளவில், வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன், இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞன், மீசாலை - புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அவ்விளைஞனை வழிமறித்து, தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
யாழில், அண்மைக்காலமாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாள்வெட்டு சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025