2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பூசாரியின் வீட்டில் திருடிய மூவர் சிக்கினர்

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் திருட்டு நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், வேலணையைச் சேர்ந்த 24 வயதுடைய பிரதான சந்தேகநபர் கஸ்தூரியார் வீதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வேலணையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும், சுன்னாகத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் என மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பிரதான சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தொடர்ச்சியாகத் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .