Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா – பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி, கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டு, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 324 பேருக்கு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 194 பேருக்கான பரிசோதனை முடிவுகள், இன்று (20) கிடைக்கப்பெற்றன.
இதன்படி, 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை, வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago