Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி ஜமுனாநந்தா தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஒமிக்ரோன் வைரஸானது மேலைத்தேய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது எனவும் எனினும், இலங்கையை பொறுத்தவரை பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றதன் காரணமாக, தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் கூறினார்.
கொரோனா தடுப்பூசி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக, பூஸ்டர் டோஸ் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அதனை அனைவரும் பெறும் போது, ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவாகும் எனவும் கூறினார்.
'எனினும் இது தொடர்பில் நாம் அதிகம் பயப்படத் தேவையில்லை. எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்து, கூட்டம் கூடுவதை தவிர்த்தால், இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
'குறிப்பாக, கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை இந்த ஓமிக்ரோன் வைரஸானது கடுமையாகப் பாதிக்கும். எனவே, சிறுவர்களை நாம் இந்த தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு கட்டாயமாக தடுப்பூசியைபெற வேண்டும்.
'எனவே அனைவரும், இந்த மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அத்தோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் ஒமிக்ரோன் போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
2 hours ago