Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.விஜிதா, எஸ்.நிதர்ஷன் எம்.ரொஷாந்த்
யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியிலுள்ள வீட்டின் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நேற்று (20) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு விசேட பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கோடரி,வாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள, வீடொன்றின் மீது வாள் வெட்டுக் கும்பலொன்று, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
சம்பவம் தொடர்பில், பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், யாழ் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட ஆயுதங்களையும், கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .