எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அது தொடர்பில் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்கு சென்ற போது குறித்த பெண்ணின் கணவன் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டார்.
குறித்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்ததுடன், அவரது சீருடையும் கிழிந்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு வந்த பொலிஸார் தாக்குதல் நடாத்தியவரை கைது செய்ததுடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
35 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
2 hours ago