Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால்நிலை வன்முறைக்கு எதிரான பெண்களுக்கான தற்காப்புப் பயிற்சிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
'உலக அமைதி வீட்டிலிருந்தே' என்னும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பயிற்சியை அந்தந்த மாவட்டச் செயலகம் ஒழுங்கு செய்ததுடன், அரசார்பற்ற நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளன.
தற்காப்புப் பயிற்சிகளை அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கராத்தே ஒவ் ஜப்பான் பெடரெசன் இன் வெளிவிவகார பணிப்பாளரான கராத்தே பிரதம ஆசிரியர் அன்ரோ டினேஸ் வழங்குகின்றார்.
நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வரும் இந்த தற்காப்புப் பயிற்சி, எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலும் நடைபெறும். கடந்தவாரம் கிளிநொச்சி மாவட்டத்தின், பச்சிலைப்பள்ளி, கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச செயலகங்களில் நடத்தப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை (03) கரைத்துறைப் பற்று பிரதேச செயலக பெண்களுக்கு மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது. தொடர்ந்து மிகுதி 5 பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .