2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

மகனை தாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

தனது மகனை மதுபோதையில் தாக்கிய தந்தைக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் கே.அரியநாயகம், நேற்று (16) தீர்ப்பு வழங்கினார்.

திருநெல்வேலி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தந்தைக்கே இவ்வாறு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. 

மது போதையில் வீட்டுக்கு வந்து 16 வயதுடைய தனது மகனை தாக்கியுள்ளார் என  கோப்பாய் பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

காயங்களுக்கு உள்ளான மகன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

 வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்றிருந்த நிலையில் தந்தைக்கு மேற்படி சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X