Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 22 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
“யாழ்ப்பாணம் வந்த பிரதமர், மக்கள் பிரச்சினைகளைக் கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத இரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வந்தார். இவர்களால் மக்களுக்கு முகங்கொடுக்க முடியாது” என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. பால்மா, எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள்களை பெறுவதில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது.
“கல்வித்துறையில் வினாத் தாள்களை பெற்றுக் கொள்வதற்கு கூட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நெருக்கடி மேலும் மோசமடைய கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
“மருந்துப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த தற்போது மூடப்பட்டுள்ளது. எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்போம் என்று ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தும் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.
“இந்த ஆட்சியை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு எதிராக அணி திரண்டுள்ளார்கள். ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
“மாற்றத்துக்கான செயற்பாட்டை மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக நாடு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்களை செய்து வருகின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
1 hours ago
5 hours ago