Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூலை 06 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்கு பகுதியில், இன்று (06) அதிகாலை, மணல் கொள்ளையர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில், நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில், மணல் கொள்ளையில் கும்பலொன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அதிகாலை 2 மணியளவில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர், அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகாரணங்களைக் கொண்டு, மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து, விசேட அதிரடி படையினர், தப்பி சென்றவர்களில் இருவரை துரத்தி மடக்கி பிடித்து, கைது செய்தனர்.
இந்த தாக்குதலில், 4 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், மணல் கொள்ளை நடைபெற்ற இடத்தில் மீட்கப்பட்ட உழவு இயந்திரத்தையும், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், தப்பிச் சென்ற ஏனையவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago
39 minute ago