2025 மே 07, புதன்கிழமை

மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜுன் 25ஆம் திகதியன்று நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வில், மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி 'நாய்' என விழித்து பேசிய குற்றச்சாட்டில், மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை, ஒரு மாத காலத்துக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தடை சட்டமானது, முரணானதெனக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்த், மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X