Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். றொசாந்த்
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தையில் மேலும் அறுருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது அதன்மூலம் மருதனார்மடத்துடன் தொடர்புடைய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்னிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 100 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகியுள்ளது.
இதன்படி, தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
4 hours ago