Niroshini / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த். என்.ராஜ்
மருதனார்மடம் பொதுச் சந்தையின் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை (12), முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பிசிஆர் முடிவு, அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால், இன்று (15) இறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை சண்டிலிப்பாயைச் சேர்ந்த தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளhவர்.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற மேலும் சில மாதிரிகளின் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago