Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந், எம்.றொசாந்த்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழைப் பெறுவதில், யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், விரைவில் தீர்க்கப்படுமென்று, யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அதிகார சபை அலுவலகத்தை, இன்று (18) திறந்துவைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு, ஒரேயோர் இடமே இருப்பதாகவும் இது, இந்த மாவட்டத்திலுள்ள குடித்தொகையின் அளவுக்குப் போதாமலுள்ளதாகவும் கூறினார்.
இதனால், பலரும் அதிகாலை 2 மணிக்கு முன்னரே வந்து, "டோக்கன்" பெறுகின்றார்களெனத் தெரிவித்த அவர், அதிலும் சில இடைத்தரகர்கள், "டோக்கள்" விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்களெனவும் குற்றஞ்சாட்டினார்.
கிளிநொச்சி , வவுனியா ஆகிய மாவட்டங்களில், மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு நெருக்கடிகள் இல்லையெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago