Niroshini / 2020 நவம்பர் 18 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர், இன்று (18), தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கோப்பாய் - வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி, தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவன் நேற்றையதினம் வகுப்புகளுக்கு சமூகமளிக்காததால், அவருடைய நண்பர்கள் அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக அழைப்புகளை மேற்கொண்ட போதும், அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்த போது, குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025