Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மானிய விலையில் பெற்ற உருளைக்கிழங்கை உரிய நோக்கத்துக்குப் பயன்படுத்தாதவர்கள், எதிர்காலத்தில் விவசாயம் தொடர்பான எந்த உதவிகளும் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சிவப்புப் பட்டியலில் பதவு செய்யப்படவுள்ளனரென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக விவசாயத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த திணைக்களத்தினர், முறைகேடான பயனாளிகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்வதற்காக, கடந்த காலபோகத்தின் போது, மானிய விலையில் விதை உருளைக்கிழங்கு வழங்குவதற்கு பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனரெனத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இந்த நடைமுறையிலும் தவறுகள் ஏற்பட்டிருப்பதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த திணைக்களத்தினர், மானிய விலையில் உருளைக்கிழங்கைப் பெற்று, உரிய முறையில் பயிர்ச் செய்கையில் ஈடுபடாமல் விற்பனை செய்தவர்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியவர்களையும் கண்டறிவதற்கு, உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் களப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனரெனவும் கூறினர்.
இந்தக் களப்பயணத்தின் போது, போலியான விவசாயிகளை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளாகவும், திணைக்களத்தினர் கூறினர்.
3 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago