Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூலை 07 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 38 குடும்பங்கள், சுகாதர பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே - 276 கிராம சேவையாளர் பிரிவில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், குறித்த பதிவுத் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் அடையாளம் காணப்பட்டு, சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மணமகனான பொலிஸ் உத்தியோகஸ்தருடன் கடமையாற்றும் 08 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago