Freelancer / 2022 ஜூலை 13 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி. விஜித்தா
யாழ்ப்பாணம் - கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ஐ.ஓ.சி நிரப்பு நிலையத்தில் கூடியிருந்த பொது மக்கள், நேற்று காலை (12) மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டனர்.
பங்கீட்டு அட்டைக்கு பெற்றோல் விநியோகம் என அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டி வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை அழைத்து அரசாங்க அதிபர் நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்க அழைத்திருந்த போது, மாவட்ட செயலகத்திற்கு ற் செல்ல ஊடகவியலாளர்களையும் அனுமதிக்கவில்லை.
அதேவேளை, நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்புவதற்கு, பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி ஊடாக தகவல் வழங்கப்படுமென்றும், கிராம அலுவலர் ஊடாக பதிவு செய்பவர்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுமென்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அதன் பின்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். (R)
29 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago