Princiya Dixci / 2022 மார்ச் 24 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன், வி.நிதர்ஷன்
மின்வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு, அங்கிருத்த ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மடிக்கணினி திருடப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியில் நேற்று (23) மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளை , பாடசாலை சூழலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கமெராக்கள் செயற்படாது இருந்தமையை பயன்படுத்தி, இந்த திருட்டுச் சம்பவம் இடப்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பாடசாலைக்கு அருகில் பொலிஸ், இராணுவம் இணைந்த காவலரண் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago